'உன்னோட மனுஷன் வாழ்வானா'?...'தாலி கட்டிய மறுகணமே விவாகரத்து'...ரணகளமான கல்யாண வீடு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Nov 11, 2019 10:49 AM

மகிழ்ச்சியாய் அனைவரும் ஒன்று சேர்ந்த திருமணம், தாலி கட்டிய மறுகணமே விவகாரத்தில் முடிந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் நடந்துள்ளது.

Bride calls off marriage as drunk groom breaks into Nagin dance

வடமாநில திருமணங்களில் பல சடங்குகள் இடம்பெற்றிருக்கும். அங்கு நடைபெறும் திருமணங்களில் ஆடல், பாடல் என அந்த இடமே மகிழ்ச்சியில் களைகட்டியிருக்கும். அதுபோன்று உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் கடந்த வெள்ளிக்கிழமை மகிழ்ச்சியாய் ஆரம்பித்த திருமணம், ரணகளத்தில் முடிந்திருப்பது தான் சோகத்தின் உச்சம்.

பரேலியில் உள்ள கிராமம் ஒன்றில் டிப்ளமோ படித்த பெண்ணுக்கும், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சொந்தங்கள் சூழ விமரிசையாக தாலி கட்டும் வைபவம் நடைபெற்றதது. இதையடுத்து மணமக்கள் கழுத்தில் மாலையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த போது, மணமகனை அவரது நண்பர்கள் பாம்பு நடனம் ஆட அழைத்துச் சென்றனர். அப்போது தான் பிரச்சனையே ஆரம்பித்தது.

மாப்பிளை சந்தோச கதியில் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தபோது, போதை தலைகேறியதால் தள்ளாடியபடி விழுந்து எழுந்து நடனம் ஆடிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த மணப்பெண் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மணப்பெண், தாலி கட்டும் நேரத்தில் கூட தண்ணி அடித்து கொண்டு தான் வருவியா என மணமகனை அர்ச்சனை செய்தார். உன்னோட மனுஷன் வாழ்வானா என மாலைகளை கழற்றி வீசி மணமேடையை விட்டு இறங்கி சென்றார்.

இதனை சற்றும் எதிர்பாராத மணமகன், மணப்பெண்ணை அடிக்க, பதிலுக்கு மணப்பெண்ணின் உறவினர்கள் அவர்களை தாக்க, கல்யாண வீடே ரணகளமானது. இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து இரு வீட்டாரையும் சமாதானம் செய்தனர். இதனைத்தொடர்ந்து பிரச்சனையை நாங்கள் பேசி தீர்த்து கொள்கிறோம் என இரண்டு குடும்பத்தினரும், புகார் ஏதும் கொடுக்கவில்லை.

மணமகள் தரப்பில் கொடுக்கப்பட்ட அனைத்து சீர்களையும் மாப்பிள்ளை வீட்டார் கொடுத்துவிட, மணப்பெண் குடும்பத்தினர் அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றனர். இதனால் மகிழ்ச்சியில் முடிய வேண்டிய திருமணம் ரணகளத்தில் முடிந்தது.

Tags : #UTTARPRADESH #NAGIN DANCE #WEDDING #DIVORCE #BRIDE #GROOM