'மோர்ல' வெஷம் கலந்து குடுத்துட்டா.. 'நாடகமாடிய' புதுமாப்பிள்ளை .. செம டுவிஸ்ட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 20, 2019 05:23 PM

திருமணமான 10 நாளில் மனைவி மோரில் விஷம் கலந்து கொடுத்து விட்டதாக, இளைஞர் கூறிய விவகாரத்தில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.

Andhra man poison drama ended with twist, Read here

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜோனகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கையா. இவருக்கும் நாகமணி என்ற பெண்ணுக்கும், கடந்த 10 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. தொடர்ந்து புதுமணத்தம்பதி இருவரும் மணப்பெண் வீட்டிற்கு சென்றனர். அங்கு நாகமணி அவருக்கு இரவில் பால் கொடுத்துள்ளார். பாலைக்குடித்த சிறிது நேரத்தில் வயிற்று வலியால் லிங்கையா துடிக்க, அவரை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு லிங்கையா தன்னுடைய புது மனைவி தனக்கு மோரில் விஷம் கலந்து கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். திருமணமான 10 நாளில் மனைவி கணவரைக் கொல்ல விஷம் கொடுத்துள்ளார் என்ற செய்தி அந்த ஊர் முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. இதுகுறித்து காவல் துறைக்கும் தகவல் சென்றது. காவல் துறையினர் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தத் தொடங்கினர்.

இந்தநிலையில் சிகிச்சைக்குப்பின் லிங்கையாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணத்திற்கு முன் லிங்கையா வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரின் வீட்டில் அதற்கு சம்மதம் தெரிவிக்காமல் நாகமணியை திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதனால் விஷம் அருந்தியது போல நாடகமாடிய லிங்கையா மருத்துவமனைக்கு செல்லும் முன் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து அருந்தி இருக்கிறார்.

தற்போது காதலுக்காக லிங்கையா நடத்திய நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் நாகமணி பால் கொடுத்த நிலையில் லிங்கையா மோரில் விஷம் கலந்து கொடுத்து விட்டதாக நாடகமாடியது இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

 

Tags : #WEDDING