"கல்யாணமாகி 3 நாள் தான்".. காரை வழிமறித்த பைக்.. அரண்டு போன மாப்பிள்ளை.. அடுத்த நிமிஷமே புது பெண் செஞ்ச அதிர்ச்சி விஷயம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமான மூன்றே நாட்களில் புதுப்பெண் செய்த விஷயம் காரணமாக, மாப்பிள்ளை கதறி அழுத சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கரை சேர்ந்த பெண்ணுக்கும் குளித்தலை பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஒருவரின் வாழ்வில் இரண்டாவது கட்டமாக பார்க்கப்படும் திருமண வாழ்க்கையை மிகவும் சிறந்த முறையில் தொடங்கியதாகவும் அந்த வாலிபர் கருதி உள்ளார். இதனையடுத்து திருமணம் ஆகி ஒரு சில நாட்கள் கழித்து காரில் குலதெய்வம் கோவிலுக்கும் தனது மனைவியை அழைத்துச் சென்றுள்ளார் அந்த வாலிபர். அந்த சமயத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த காரை பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை அருகே பைக்கில் வந்து சிலர் காரை வழிமறித்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனைக் கண்டதும் புது மாப்பிள்ளை குழம்பி போக, காரில் இருந்த புதுப் பெண்ணும் கீழே இறங்கி சென்று தாலியை கழற்றி கணவரிடம் கொடுத்து விட்டு பைக்கில் வந்த நபருடன் சென்றதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் கூச்சல் போடவே, அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததாகவும் தெரிகிறது. அது மட்டுமில்லாமல், புது பெண்ணையும் பைக்கில் வந்த நபரையும் அவர்கள் பிடித்து நிறுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக பின்னர் விசாரித்த போது பைக்கில் வந்த நபர் புதுப்பெண்ணை காதலித்து வந்துள்ளார் என்றும், திருமணமானது தனக்கு பிடிக்காமல் மீண்டும் காதலருடன் செல்ல திட்டம் போட்டதும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர், பைக்கில் வந்த நபரை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து புதுப் பெண்ணின் தந்தையிடமும் இது தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரிடம் பெண்ணை ஒப்படைத்து விட்டு தனக்கு நேர்ந்ததை எண்ணி புது மாப்பிள்ளை கதறி அழுததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் கடும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
தொடர்ந்து அந்த புதுப்பெண்ணின் காதலர் தொடர்பாக விசாரணையை போலீசார் மேற்கொண்ட நிலையில் அவர் சேலூர் செல்லப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தனியார் கல்லூரியில் பஸ் டிரைவராக இருந்த போது அந்த பெண்ணை காதலித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
திருமணமான மூன்றே நாட்களில் காதலனுடன் செல்ல முடிவெடுத்த இளம் பெண் தொடர்பான செய்தி தற்போது அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
Also Read | குஜராத் தேர்தல் : முதல் தேர்தலில் சாதித்தாரா ரவீந்திர ஜடேஜா மனைவி?.. வெளியான வாக்கு எண்ணிக்கை நிலவரம்!!

மற்ற செய்திகள்
