குஜராத் தேர்தல் : முதல் தேர்தலில் சாதித்தாரா ரவீந்திர ஜடேஜா மனைவி?.. வெளியான வாக்கு எண்ணிக்கை நிலவரம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Dec 08, 2022 04:46 PM

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, தற்போது காயம் காரணமாக சில தொடர்களில் இருந்து விலகி உள்ளார். விரைவில் அதிலிருந்து பூரண குணமடைந்து அடுத்து வரும் தொடர்களில் நிச்சயம் ஆடுவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

Ravindra jadeja wife rivaba won in gujarat election polls

Also Read | கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்கள்.. வீடும் கைவிட்டு போன நேரத்தில்.. 27 லட்சம் கடனை செலுத்தி மாணவியை நெகிழ வைத்த பூனாவாலா!!

அப்படி ஒரு சூழலில், குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில், ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜக சார்பில் போட்டியிட்டிருந்த நிலையில் இது தொடர்பான வாக்கு எண்ணிக்கைகள் தற்போது வெளியாகி உள்ளது.

ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அப்படி ஒரு சூழலில், 2022 குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வாய்ப்பும் ரிவாபாவுக்கு கிடைத்தது. அதன்படி, குஜராத் சட்டசபையின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரிவாபா ஜடேஜா பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

Ravindra jadeja wife rivaba won in gujarat election polls

இந்த நிலையில், குஜராத் சட்டசபை தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் முன்னிலை பெற்று ரிவாபா வெற்றி பெற்றதும் ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. 15 சுற்றுகள் முடிவில், சுமார் 70,000 வாக்குகள் பெற்ற ரிவாபா, தனது போட்டியாளரை விட 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். முன்னதாக, வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் சற்று பின்தங்கி இருந்த ரிவாபா, அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்று வெற்றியும் பெற்றுள்ளார்.

Ravindra jadeja wife rivaba won in gujarat election polls

தேர்தலில் களமிறங்கிய முதல் முறையிலேயே அதில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆக நியமிக்கப்பட உள்ள ரிவாபா ஜடேஜாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | இருமிக் கொண்டே இருந்த பெண்.. அடுத்த சில நிமிசத்தில் உடைந்த எலும்புகள்??.. "அந்த உணவு சாப்பிட்டது தான் காரணமா?".. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்!!

Tags : #RAVINDRA JADEJA #RAVINDRA JADEJA WIFE #RAVINDRA JADEJA WIFE RIVABA #RAVINDRA JADEJA WIFE RIVABA WON IN GUJARAT ELECTION #GUJARAT ELECTION RESULTS 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ravindra jadeja wife rivaba won in gujarat election polls | India News.