'சிட்டாக பறந்து'...'ஒரே கையில் புடிச்ச கேட்ச்'...தெறிக்க விட்ட 'ஹர்மன்பிரீத்'...வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Nov 02, 2019 06:11 PM

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் பிடித்த அசத்தல் கேட்ச் தற்போது வைரலாகி வருகிறது.

Harmanpreet Kaur Takes Astonishing One Handed Catch video goes viral

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுக்கு சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில், முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இறுதி வரை போராடி, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் பிடித்த கேட்ச் தற்போது பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த போட்டியின் 50வது ஓவரை இந்திய வீராங்கனை எக்தா பிஸ்ட் வீசினார். அப்போது 94 ரன்கள் அடித்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் டெய்லர், கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தார். அப்போது பந்து எல்லை கோட்டை நோக்கி சென்றபோது ஹர்மன்பிரீத் அழகாக தாவி ஒரு கையில் கேட்ச் பிடித்து அசத்தினார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஹர்மன்பிரீத் பிடித்த அசத்தலான கேட்ச் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Tags : #FACEBOOK #TWITTER #CRICKET #HARMANPREET KAUR #ODI #ONE HANDED CATCH