என் அம்மாவிற்கு 'அழகான' மணமகன் தேவை.. இப்படியும் ஒரு மகளா?.. செம வைரல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 02, 2019 12:13 AM

நாம் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும் பெண்கள் மறுமணம் குறித்து தவறான புரிதல்கள் இன்றளவும் நமது சமூகத்தில் நிலவி வருகின்றன. ஒரு குழந்தைக்கு அம்மா ஆகிவிட்டால் மறுமணம் குறித்து அந்த பெண் கனவிலும் நினைக்க கூடாது என்ற பிற்போக்கு எண்ணங்களும் இங்கே அதிகளவில் நிலவுகின்றன.

looking for a handsome man, young girl tweet goes viral

இந்தநிலையில் தனது அம்மாவிற்கு அழகான துணை வேண்டும் என இளம்பெண் ஒருவர் பதிவிட்ட போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது. சட்டக்கல்லூரி மாணவியான அஸ்த வர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''என்னுடைய அம்மாவிற்கு 50 வயதான அழகான ஆண் துணையை தேடுகிறோம். சைவம் சாப்பிடுபவராக, அனைவருக்கும் தெரிந்தவராக, குடிப்பழக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும்,'' என தெரிவித்து இருக்கிறார்.

இவரின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. பிரபலங்கள் பலரும் இவரின் முயற்சியை பாராட்டி வருகின்றனர். மேலும் நெட்டின்சன்கள் பலருக்கும் இவரின் இந்த துணிச்சலான பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தி  உள்ளது. அவர்களில் பலரும் இவரின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

 

Tags : #TWITTER