டிக்டொக் மோகம்: மண்வெட்டி.. இப்டி 'மண்டைய' உடைச்சிருச்சே தம்பி... வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Nov 06, 2019 06:21 PM

டிக்டொக் மோகத்தால் இளைஞர்கள் வீடியோ எடுக்க பல்வேறு ஆபத்தான வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் கூட ஒரு இளைஞர் பைக்கில் நின்று தலைகீழாக குதித்து உயிரை விட்டார். அதேபோல ஆந்திராவில் ஒரு இளைஞர் அணைக்கட்டு பகுதியில் நின்று டிக்டொக் செய்து உயிரை விட்டார்.

Spade fall down youth\'s head, video goes viral on twitter

அந்த வகையில் இளைஞர் ஒருவர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விவசாய நிலமொன்றில் நடந்து வரும் இளைஞர் வித்யாசமாக வீடியோ எடுக்கும் ஆசையில், கையில் இருந்த மண்வெட்டியை தூக்கி மேலே எறிகிறார்.அது மேலே சென்று மீண்டும் கீழே வந்து சரியாக அவரது தலையில் அடிக்கிறது.

மண்வெட்டியின் முனைப்பகுதி அவரது மீது பட்டதால் தலையில் காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார். இதுவே வெட்டும் பகுதி அவரது மீது பட்டு இருந்தால் அங்கேயே உயிர் இழந்திருந்தாலும் ஆச்சரியமில்லை. இதைப்பார்த்த பலரும் மனித உயிர் விலை மதிக்க முடியாதது என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

Tags : #TWITTER