'ஒரே மாசத்துல 837 பிரசவம்...' 'அதுவும் ஒரே ஹாஸ்ப்பிட்டல்...' ஒரே நாள்ல எவ்ளோ பிரசவம் பார்த்துருக்காங்க தெரியுமா...? பயங்கர ஆச்சரியம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jun 02, 2020 06:39 PM

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கியது முதல் வரலாறு சிறப்புமிக்கது போல மே மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக சுமார் 837 பிரசவம் நடந்துள்ள செய்தி அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது.

Nellai Govt Hospital has had 837 deliveries a month

பெரும்பாலும் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களும் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே உடல்நிலை பாதிப்பு மற்றும் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையை அணுகுவர். ஏழைகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அதன் பெயரில் ஒரு அரசு மருத்துவமனை செயல்படும் அவ்வாறு உருவாக்கப்பட்ட நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த மே மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 837 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளது. 837 பிரசவங்களில் 354 பிரசவங்களில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்துள்ளன. மற்ற அனைத்து குழந்தைகளுமே இங்கு சுகப்பிரசவமாக பிறந்தது குறிப்பிடத்தக்கதாகும்

இதற்கு முன்பு அதிகபட்சமாக ஒரு மாதத்தில் 600 முதல் 700க்குள்பட்ட எண்ணிக்கையிலேயே பிரசவங்கள் நடந்துள்ளன எனவும், நாள்தோறும் கிட்டத்தட்ட 20 பிரசவங்கள் நடைபெற்று வந்தன. இந்த எண்ணிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில் தற்போது ஒரே மாதத்தில் மட்டும் 867 ஆக எகிறியுள்ளது. இந்த எண்ணிக்கையானது நெல்லை அரசு மருத்துவமனை வரலாற்றில் ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது.

கடந்த மார்ச் 24ம் தேதி 144 தடை உத்தரவுக்கு பின்னர் நெல்லை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிரசவிக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கொரோனா அச்சம் காரணமாக சில தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும், ஓரளவு வசதி உள்ளவர்களும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 மாதமாக அதிக அளவில் பிரசவ வார்டுகளில் சேர்க்கப்பட்டு செலவு ஏதுமின்றி குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.

கடந்த மே மாதம் தினமும் சராசரியாக 25 பிரசவங்கள் நடந்துள்ளன. ஒரே நாளில் அதிகபட்சமாக 34 பிரசவம் பெண் மருத்துவ சிகிச்சை நிபுணர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

இங்கு பிரசவிக்கப்பட்ட தாய்மார்களில் கொரானா பாதிப்பு அல்லது கொரோனா அறிகுறி உள்ள கர்ப்பிணிகள் ஆறு பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனைவரும் தனி வார்டுகளில் வைத்து கவனிக்கப்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டு நலமாக பெற்றெடுத்த குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கு மிக முக்கிய காரணமாக அமைப்பவர்கள் மருத்துவர்களே எனலாம். கொரோனா அச்சத்தையும்  மீறிப் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களுக்கு டீன் டாக்டர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம், உறைவிட மருத்துவ அலுவலர் ஷியாம் மற்றும் துறைத் தலைவர்கள் டாக்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : #BABY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nellai Govt Hospital has had 837 deliveries a month | Tamil Nadu News.