'ஒருத்தரும் உதவிக்கு வரல'... 'நடுரோட்டில் நடந்த கொடூரம்'... நெஞ்சை உலுக்கும் 'சிசிடிவி காட்சிகள்' !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 06, 2019 02:04 PM

நெல்லையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.

Nellai Auto Driver killed in Public Place CCTV footage released

நெல்லை பழையபேட்டை சர்தார்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான குட்டி என்கிற சுடலை, கடந்த 3ஆம் தேதி இரவு டவுண் ஆர்ச் அருகே மர்ம நபர்கள் இருவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,சுடலை வெட்டி கொல்லப்பட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தவறான உறவினால் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நெல்லை டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில் நெல்லை சர்தார் புரத்தைச் சேர்ந்த முருகன் என்ற பெயரையுடைய இருவர் சேர்ந்து, சுடலையை வெட்டி கொலை செய்தது, தெரியவந்தது.முருகனுடைய மனைவியுடன் ஏற்பட்ட தவறான உறவே இந்த கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.முன்னதாக சுடலை உயிரை காப்பாற்றி கொள்ள கடுமையாக போராடும் காட்சிகள் சிசிடிவி பதிவில் இடம்பெற்றுள்ளது.மேலும் கொலை நடந்த போது பலரும் சாலையை கடந்து சென்ற போதும்,யாரும் சுடலையை காப்பாற்றாமல் செல்வதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

Tags : #MURDER #POLICE #CCTV #AUTO DRIVER #NELLAI