தமிழக நீட் தேர்வுக்கான 6 மையங்கள் திடீர் மாற்றம்.. எந்தெந்த மையங்கள் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 03, 2019 04:32 PM
நாளை மறுநாள் நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், நெல்லை மற்றும் மதுரையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 6 தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்களுக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை மறுநாள் அதாவது வரும் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற இருக்கிறது. தமிழகத்திலும் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கொடுக்கப்பட்டு தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தினால் சில தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் நீட் தேர்வுக்காக அமைக்கப்பட்டிருந்த 6 தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் திடீரென மாற்றப்பட்டுள்ளன.
தேர்வர்கள் புதிய தேர்வு மையங்களின் அமைவிடத்தை தெரிந்து வைத்துக்கொண்டு இடர்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்தாண்டு நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
