'என்னையா அடிக்குற'?...நான் 'தீவிரவாதி' தெரியுமா?...சென்னையை அதிர வைத்த இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 26, 2019 03:25 PM

கட்டுமான ஊழியர்களுக்குள் ஏற்பட்ட தகராறின் போது,ஊழியர் ஒருவர் தன்னை தீவிரவாதி எனக்கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Suspected ULFA Terrorist arrested in chennai

சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. அதில் அஸ்ஸாமைச் சேர்ந்த கந்தர்ப்பதாஸ் என்பவர் வேலை செய்து வருகிறார்.அவருடன் சேர்த்து அஸ்ஸாமைச் சேர்ந்த 5 பேரும் அங்கு வேலை பார்த்து வருகின்றனர்.இதனிடையே நேற்று வேலை செய்து கொண்டிருந்த போது,அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது திடீரென அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.மோதலின் உச்சக்கட்டத்தில் ஊழியர் ஒருவர், கந்தர்ப்பதாஸை தாக்க முயன்றுள்ளார்.அந்த நேரத்தில் தான் ஒரு உல்பா தீவிரவாதி என்று,கந்தர்ப்பதாஸ் மற்றவர்களை மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன ஊழியர்கள்,நடந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர். உடனே மருத்துவமனையின் பாதுகாப்பு பிரிவு மேலாளர்,கந்தர்ப்பதாஸ் குறித்த விவரங்களை இணையதளங்களில் சேகரித்துள்ளார்.அதில் அவர் உல்பா தீவிரவாதியாக இருந்ததற்கான ஆதாரங்களும், இது குறித்து கந்தர்ப்பதாஸ் மீது வழக்கு நிலுவையில் உள்ள தகவலும் இடம்பெற்றுள்ளன.இதனால் அதிர்ந்து போன அவர்,உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கந்தர்ப்பதாஸிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.அவர் உல்பா தீவிரவாதியா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TAMILNADUPOLICE #POLICE #ULFA TERRORIST #KANTHARPPADOSS #Q BRANCH CID