“தண்ணீர் பந்தலில் இருந்து டம்ளரை எடுத்துச் செல்லும் ரோந்து போலீஸார்”.. பரவும் சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 05, 2019 01:02 PM

இரவு நேரத்தில் தண்ணீர் பந்தலில் இருந்து போலீஸார், டம்ளரை எடுத்துச் செல்லும் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியதை அடுத்து இணையதளத்தில் இளைஞர்களால் பகிரப்பட்டு வருகிறது.

TN Police men Takes Plastic tumbler from public water service

கோடை காலம் என்பதால் ஆங்காங்கே தண்ணீர் பந்தலும், இலவச மோர் பந்தலும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பலவற்றை கட்சி சார்ந்தவர்களும், பலவற்றை பொது சமூக ஆர்வலர்களும் வைத்துள்ளனர். இதனால் கோடைகாலத்தில் ஊர் விட்டு ஊர் இடம் பெயர்ந்து சென்றுவரும் பலரும் பயனடைகின்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அருகே, மேற்பனைக்காடு பேட்டை பகுதியில் தண்ணீர் பந்தல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் மண்பானையும், அதன் மீது பிளாஸ்டிக் டம்ளரும் வைக்கப்பட்டிருந்தன. இரவு நேரத்தில் அங்கு ரோந்து பணிகாக வந்த இரண்டு போலீஸார், வண்டியை நிறுத்துகின்றனர்.

அதில் ஒரு காவலர் மட்டும் இறங்கிச் சென்று தண்ணீர் பந்தலில் இருந்த டம்ளரை எடுத்துக்கொண்டு, பானையை ஓப்பன் செய்து பார்த்துவிட்டு, டம்ளரை மட்டும் எடுத்துக்கொண்டு வந்து வண்டியில் ஏறுகிறார். பின்னர் இருவரும் கிளம்புகின்றனர். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி, இளைஞர்களால் பகிரப்பட்டு வருகின்றனர்.

Tags : #TNPOLICE #VIRALNEWS #CCTV #BIZARRE