“தம்பியை கொன்ற அக்கா”!.... பதற வைக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 05, 2019 01:15 PM

குமாரபாளையம் அருகே சொத்துக்காக தம்பியை அவரின் சகோதரியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

brother killed by his own sister for assets

வேமன்காட்டுவலசு கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிவேல் மற்றும் அவரது சகோதரி கலாவுக்கு நிறைய சொத்துக்கள் இருக்கின்றது. இதனையடுத்து, சொத்து சம்பந்தமாக கலா தனது சகோதரன் பழனிவேலிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (04/05/2019) மாலை பழனிவேல் மயங்கி கீழே விழுந்ததாக கூறி கலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்து விட்டு தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் பழனிவேல் சேர்க்கப்பட்டபோது  சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் பழனிவேலை அவரின் சகோதரி கலா மற்றும் குடும்பத்தினர், தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார்  கலா, அவரது கணவர், மகன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

Tags : #MURDER #BROTHER #SISTER