'அப்பா' 'போகாதீங்க'...'கால்களை பிடித்து கதறல்'...நெட்டிசன்களை கலங்கடித்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 29, 2019 02:46 PM

காவல்துறை அதிகாரி ஒருவர் வேலைக்கு செல்லும் போது,அவரை போக விடாமல் தடுத்து அழும் வீடியோ காண்போரை கலங்க வைக்கும் வகையில் உள்ளது.

police officer, trying to leave for office, being stopped by his child

காவல்துறையினரின் பணியினை நாம் எப்போதுமே வரையறுக்க முடியாது. அவர்கள் கால நேரம் பார்க்காமல் எப்போதுமே தங்கள் பணியில் விழிப்புடன்   இருக்க வேண்டும்.இதனால் தங்களின் குடும்பத்துடன் அவர்களால் நேரத்தை செலவிட முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில் அவர்களால்,குடும்பத்துடன் சேர்ந்து பண்டிகையை கொண்டாட முடிவதில்லை.

இந்நிலையில் ஓடிஸாவை சேர்ந்த காவல்துறை அதிகாரி அருண் போத்ரா,தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று காண்போரை கலங்க வைக்கும் வகையில் உள்ளது.காவல்துறை பணியில் இருப்பது கஷ்டம் தான்.நேரம் காலம் பார்க்காமல் பணியில் இருக்கும் போது அனைத்து காவலர்களும் இது போன்ற சூழ்நிலையினை சந்திப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் ''வேலைக்கு கிளம்பும் காவலர் ஒருவரை,அவரது குழந்தை பிடித்து கொண்டு வேலைக்கு போக வேண்டாம் என கதறுவது கண் கலங்க வைக்கிறது.தனது குழந்தையினை சமாளிக்க காவலர் எடுக்கும் முயற்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #POLICE #TWITTER #ARUN BOTHRA