குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய நபரால் சென்னையில் நடந்த கோர விபத்து.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 03, 2019 05:26 PM

சென்னையில் குடிபோதையில் காரை ஓட்டி இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Horrifying video captures Chennai driver mowing down 2 persons

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் இன்று காலை இனோவா கார் ஒன்று தாறுமாறாக சென்றுள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் பதறி சாலை ஓரமாக நின்றுள்ளனர். இதனை அடுத்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்ற கார் டீ கடைக்கு வெளியே நின்றுருந்தவர்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதனைப் பார்த்த மக்கள் காரை துரத்த ஆரம்பித்துள்ளனர். இதனை அடுத்து கார் மீண்டும் வேகமாக சென்றுள்ளது. அப்போது சாலையில் நடந்த வந்த மூதாட்டியின் மீது வேகமாக மோதி தறதறவென இழுத்துச் சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தகவலறிந்த வந்த காவல் துறையினர் காரை தாறுமாறாக ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய நபரை கைது செய்தனர். மேலும் போலிஸார் நடத்தி விசாரணையில் அந்த நபர் குடிபோதையில் காரை ஓட்டியது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் வில்லிவாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்த மோகன்(40), சரசா(65) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆதிலட்சுமி(50) என்ற மூதாட்டி கீழ்பாக்கம் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடிபோதையில் சாலையில் சென்றவர்கள் மீது விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI #ACCIDENT #CCTV