'வேற லெவல் நடிப்பு, முகத்துல சலனம் இல்ல'...'பக்காவா போடப்பட்ட பிளான்'...விசாரணையில் வெளிவந்த மனைவியின் கோர முகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 05, 2020 04:19 PM

தாலி கட்டிய கணவன் என்று கூட பாராமல், ஒரு மனைவி இந்த எல்லைக்குச் செல்வாரா என நினைக்க வைக்கும் அளவிற்கு நடந்துள்ளது இந்த சம்பவம்.

Nagercoil woman and lover arrested for bid to kill husband

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அருகே கேசவ திருப்பாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ். இவர் திருமண வீடுகளில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் கலைஞராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி காயத்ரி. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் கட்டிலிலிருந்து கீழே விழுந்து அடிப்பட்டதாகக் கூறி, கணவர் கணேஷை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு நினைவு திரும்பாமல் இருந்த நிலையில், 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தொடர்ந்து தீவிர சிகிச்சையில் கணேஷ் இருந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக அவரது உடல்நிலை சரியானது. இதையடுத்து சம்பவம் நடந்த அன்று என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் கணேஷிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர் கூறிய தகவல் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்று நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தன்னை யாரோ தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் கணேஷின் மனைவி காயத்ரி கூறிய தகவல் பொய் என நிரூபணமான நிலையில், அவர் எதற்காக அப்படிக் கூறினார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது காயத்ரி பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். அதில், ''திருமணத்தை மீறிய உறவின் காரணமாகக் கூலிப் படையை ஏவி கணவனைக் கொலை செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்''. அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து காயத்ரி மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கருணாகரன், விஜயகுமார் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து கணேசை கொலை செய்வதற்குச் சதித்திட்டம் தீட்டக் காரணமாக இருந்த காயத்ரியின் கள்ளக்காதலன் மதுரையைச் சேர்ந்த முகமது யாசினை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் முகமது யாசின் மதுரையில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குமரி மாவட்ட போலீசார் நேற்று முன்தினம் மதுரை சென்று, 2 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த முகமது யாசினை அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகின.

அதாவது ''மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகர்கோவிலில் தான் வசித்து வந்தார். அந்த சமயத்தில் காயத்ரிக்கும், முகமது யாசினுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு 2 பேரும் காதலிக்கத் தொடங்கினர். ஆனால் முகமது யாசினுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருந்தது. எனினும் முகமது யாசினை, காயத்ரி காதலித்து உள்ளார். முகமது யாசின் பீச்ரோடு பகுதியில் மழலையர் பள்ளியைத் தொடங்கி இருக்கிறார். அந்த பள்ளிக்கு தன் கள்ளக்காதலியான காயத்ரியை மேலாளராகவும் நியமித்து உள்ளார்.

காயத்ரியின் காதல் விவகாரம் அவருடைய குடும்பத்தாருக்குத் தெரியவரவே உடனடியாக கணேசுடன் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணத்துக்கு பிறகும் தன் கள்ளக்காதலன் முகமது யாசினை அவர் மறக்கவில்லை. தினமும் செல்போனில் பேசி வந்திருக்கிறார். குறிப்பாக இரவில் கணவர் தூங்கிய பிறகு தான் பேசத் தொடங்கி உள்ளார். காயத்ரிக்குத் திருமணம் ஆன சில மாதங்களில் முகமது யாசின் தன் சொந்த ஊரான மதுரைக்குச் சென்றுவிட்டார். ஆனாலும் அவ்வப்போது நாகர்கோவிலுக்கு வந்து காயத்ரியைச் சந்தித்து வந்துள்ளார்.

அந்த நேரத்தில் இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது. காயத்ரி கடைசியாகத் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.10 லட்சத்தை முகமது யாசினுக்கு கொடுத்துள்ளார். இந்த பணம் தொடர்பாக மனைவியிடம் கணேஷ் விசாரித்த போது குடும்பத்தில் பிரச்சினை உருவானது. இதனால் கணவரைத் தீர்த்துக் கட்ட கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்ட காயத்ரி, கூலிப்படையை ஏவி கணவரைக் கொல்ல முயன்றது தெரியவந்தது. பிறகு கைதான முகமது யாசினை போலீசார் சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்ட வழக்கில், 2 மாதங்களுக்குப் பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nagercoil woman and lover arrested for bid to kill husband | Tamil Nadu News.