“குவாரண்டைனில் இருந்த கொரோனா நோயாளிகள்!” .. நள்ளிரவில் திமுதிமுவென நுழைந்த ஏழெட்டு பேர்.. சென்னை தி.நகரில் நடந்த ‘மிரளவைக்கும்’ சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தியாகராய நகரில் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்திக் கொண்ட குடும்பத்தினர் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள சாரதாம்பாள் தெருவில், உள்ள வீட்டில் 70 வயது முதியவர் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் துபாயில் கட்டுமான பொருட்கள் சார்ந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காயல்பட்டினத்தில் இருந்து முதியவர் வீட்டுக்கு வந்த உறவுக்கார இளைஞர்கள் சிலர் தங்கியிருந்தனர்.
இந்த வீட்டில் இருந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உண்டாகி, அந்த வீட்டின் அறையில் தங்கியுள்ளனர். அவர்களை சுகாதாரத்துறையினர் அவ்வப்போது வந்து பார்வையிட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு, வெளியில் இருந்து வந்த ஏழெட்டு பேர், அந்த வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டதுடன், 250 சவரன் நகைகள், ரூ.95 ஆயிரம், வாசலில் நின்ற கார் உள்ளிட்டவற்றை கொள்ளை அடித்ததுடன், அந்த வீட்டில் இருந்த முஸ்தபா என்கிற இளைஞரை தங்களுடன் அழைத்துச் சென்று பாதி வழியில் இறக்கிவிட்டுள்ளனர்.
விசாரணையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்தவர்களை கட்டிப்போட்டு, அந்த மர்ம நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து போலீஸார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.