'புல்லட்' பைக்குங்க மட்டும் தான் இவங்க 'டார்கெட்'..." 'சென்னை'ல இருந்து திருடிட்டு போய்... 'விசாரணை'யில் தெரிய வந்த 'அதிர்ச்சி' தகவல்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையின் பல பகுதிகளில் இருந்து ராயல் என்பீல்டு வகை இருசக்கர வாகனங்களை மட்டும் குறிவைத்து திருட்டில் ஈடுபட்ட வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் பார்க்கிங் வசதி இல்லாமல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் புல்லட் பைக்குகளை மட்டும் நோட்டமிட்டு ஒரு கும்பல் கொள்ளையடித்து வந்தது.
பல புகார்கள் எழுந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்கள் தொடர்பாக முதலில் துப்பு துலக்கினர். அது மட்டுமில்லாமல், சென்னையில் இருந்து கொள்ளையடிக்கப்படும் புல்லட் பைக்குகள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.
மேலும், சந்தேகப்படும் படியான பகுதிகளில் செல்போன் டவர்களை ஆய்வு செய்த போது 3 எண்கள் அடிக்கடி தொடர்பில் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. அந்த எண்ணைக் கொண்டு தஞ்சாவூரை சேர்ந்த ஷஃபி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, அவரது கூட்டாளிகளான சிபி, அமீர்ஜான் ஆகியோரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக்குகளை திருடி விற்பனை செய்வதற்காக, தனி வாட்ஸ்ஆப் குழு ஒன்று இயங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது. அதே போல, இதுவரை 65 புல்லட் பைக்குகளை கடந்த ஓராண்டுக்கும் மேல் இந்த கும்பல் திருடி விற்பனை செய்துள்ள நிலையில், இதில் 10 பைக்குகளை போலீசார் இதுவரை பறிமுதல் செய்துள்ளனர். மற்ற பைக்குகளை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
