‘மதுரையை அதிரவைத்த சம்பவம்’.. மக்கள் நடமாடும் ‘பரபரப்பான’ சாலையில் நடந்த பயங்கரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் பைக்கில் சென்ற நபரை வழிமறித்து இளைஞர்கள் சிலர் அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்ய முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சோலை அழுகுபுரம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் மாரியம்மன் தெப்பக்குளம் வடக்கு சாலை வழியாக பைக்கில் ஒரு பையுடன் சென்றுள்ளார். இவர் செல்வதை தெரிந்துகொண்ட அடையாளம் தெரியாத இளைஞர்கள் பைக்கில் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில் தெப்புக்குளம் பகுதியில் பைக்கை சிறிதுநேரம் நிறுத்திவிட்டு ராஜா நின்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் திடீரென அரிவாளுடன் வந்து ராஜா வைத்திருந்த பையை பிடுங்க முயன்றுள்ளனர். பின்னர் அரிவாளால் ராஜாவை வெட்ட முயன்றுள்ளனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த இளைஞர்களை தடுக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது வழிப்பறியா? அல்லது கொலைத் திட்டமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாடும் பரபரப்பான சாலையில் அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
