லாரி திருடி ‘கைதாகி’.. ஜாமீனில் வெளியே வந்த உடனே திருடன் செஞ்ச ‘காரியம்’.. ஆடிப்போன போலீசார்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாலாரியை திருடியதற்காக கைது செய்யப்பட்ட ஒருவர் ஜாமீனில் வெளியே வந்து போலீசார் அதிர்ச்சி அடையும்படி சம்பவம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

நாக்பூரை சேர்ந்த சஞ்சை தோன் (50) என்பவர் லாரி ஒன்றை திருடிச் சென்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த போலீசார் லாரியை மடக்கிப் பிடித்து சஞ்சை தோனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட லாரியை காவல்நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
வழக்கு முடியும் வரை லாரியை எடுக்கமுடியாது என்பதால் அதன் உரிமையாளர் லாரியை பாதுகாக்க ஆள் ஒருவரை நியமித்துள்ளார். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த சஞ்சை தோன், நேராக லாரி நிறுத்தப்பட்டிருந்த காவல்நிலையத்துக்கு வந்துள்ளார். அங்கு காவலர்கள் அசந்த நேரம் பார்த்து மீண்டும் லாரியை அங்கிருந்து திருடி சென்றுள்ளார்.
இதனை அடுத்து யதேர்ச்சையாக லாரி நின்ற இடத்தை போலீசார் பார்த்துள்ளனர். அங்கு லாரியை காணாததால் அதிர்ச்சியடைந்த போலீசார், தற்போது சஞ்சை தோனை தீவிரமாக தேடி வருகின்றனர். லாரி திருடியதற்காக கைது செய்யப்பட்டவர், ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே லாரியை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
