‘TAKE போலாமா?’.. ‘நேரலைக்கு தயாரான ரிப்போர்ட்டர்.. அருகே வந்த ‘திடீர்’ திருடன் செய்த பதறவைக்கும் காரியம்.. #VIRALVIDEO!
முகப்பு > செய்திகள் > உலகம்நேரலையில் செய்தியாளர் ஒருவர் கையிலிருந்த ஸ்மார்ட் போனை மாஸ்க் அணிந்த இளைஞர் பறித்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த `என் விவோ எல் நியூவ்’ (En Vivo El Nueve) என்னும் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி நிருபராகப் பணியாற்றி வருபவர் டியாகோ டெமார்கோ (Diego Demarco) எனும் நபர். இவர் அர்ஜென்டினாவின் சரண்டி (Sarandi) என்னும் நகரத்திலிருந்து நேரலையில் செய்தி வழங்க தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த இளைஞர் ஒருவர், டியாகோவின் கையிலிருந்த ஸ்மார்ட்போனை பறித்துக்கொண்டு இமைக்கும் நேரத்தில் எஸ்கேப் ஆனார். போனை கொடுங்க.. என ஸ்பானிஷ் மொழியில் கத்திக்கொண்டே இளைஞரை டியாகோ துரத்துகிறார்.
ஆனால் சிறிது தொலைவிலேயே டியோகோவின் பார்வையிலிருந்து திருடன் மறைந்துவிட, அப்பகுதி மக்கள் அந்தத் திருடனை அடையாளம் கண்டு திருடனின் வசிப்பிடம் சென்று, டியாகோவின் ஸ்மார்ட்போனை மீட்டுக் கொடுத்தனர். இந்த காட்சிகள் வீடியோ கேமராவில் பதிவாகி வைரலாகியுள்ளன.