வெறும் '7 ரூபாய்க்கு' 1 ஜிபி டேட்டா.. 'பிரபல' நெட்வொர்க்கின் அதிரடி ஆபர்!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Manjula | Nov 20, 2019 12:56 PM
ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுடன் போட்டிபோடும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சில கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஏகப்பட்ட ஆபர்களை அந்நிறுவனம் வழங்கி வந்தாலும், தற்போது அறிமுகம் செய்துள்ள திட்டங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக திகழ்கின்றன.
அந்தவகையில் 7 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டாவினை பிஎஸ்என்எல் வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 1 நாள் ஆகும். அதேபோல 16 ரூபாய்க்கு 2 ஜிபி டேட்டாவினை வழங்குகிறது. இதற்கும் வேலிடிட்டி 1 நாள் தான். ஒருவாரம் வேலிடிட்டி வேண்டும் என்றால் 56 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 7 நாட்களும் தினசரி நீங்கள் 1.5 ஜிபி டேட்டாவை பெறுவீர்கள்.
ரூ.56 க்கு அடுத்தபடியாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் DataTsunami_98 திட்டம் இருக்கிறது. ரூபாய் 98-க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் இது ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது, டேட்டா வரம்பு முடிந்த பின்னர் 40 கே.பி.பி.எஸ் என்று இணைய வேகம் குறைக்கப்படும். இந்த திட்டத்தின் சந்தாதாரர்களுக்கு EROS NOW பொழுதுபோக்கு சேவைகளும் கிடைக்கின்றன. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும்.
இந்த டேட்டா வவுச்சரைப் போலவே ரூ.197 மதிப்புள்ள DATASTV_197 திட்டமும் கிடைக்கிறது. இது PRBT உடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவுக்கான டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 54 நாட்கள் ஆகும். உங்களுக்கு அதிக டேட்டா வேண்டும் என நீங்கள் கருதினால் பிஆர்பிஎஸ்டிவி_548 திட்டத்தினை தேர்வு செய்யலாம். இது ஒரு நாளைக்கு 5 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.
இதற்கு அடுத்தபடியாக DATA_1098 ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இந்த திட்டம் பிஆர்பிடியுடன் உண்மையிலேயே வரம்பற்ற டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும், இதன் மதிப்பு ரூ.1,098 ஆகும். தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டிபோடும் வகையில் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.