'இந்த காலத்துலயும் இப்படியா?'.. தனியார் பேருந்து நடத்துநரின் தன்னிகரற்ற செயல்.. குவியும் பாராட்டு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 24, 2019 03:48 PM

கரூரின் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் திரிபுரசுந்தரி. இவரது கணவர் அருணாசலமும் இவருடன் அதே பள்ளியில் வேலைபார்த்து, பின்னாளில் காலமானார். அதன் பின்னர் பெங்களூரில் தன் மகன் பிச்சுமணியுடன் வசித்து வந்தார் திரிபுரசுந்தரி. தனது கணவர் மற்றும் தனது ஓய்வூதியத்தைப் பெற்றுவரும் திரிபுரசுந்தரி மிக அண்மையில்,  தனது மகனுடன் கரூர் சென்று தமது ஓய்வூதியமான 5 ஆயிரத்தை பெற்று, பையில் வைத்துக்கொண்டு கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அவரது பை காணாமல் போயுள்ளது.

Private Bus conductor saves missed bag of senior citizen

ஓய்வூதியம் கிடைக்காவிட்டாலும், அந்த பையில் இருந்த ஓய்வூதியப்புத்தகம் மட்டுமாவது கிடைக்க வேண்டும் என்றுதான் திரிபுரசுந்தரி எண்ணியுள்ளார். இதனையடுத்து பிச்சுமணி முதலில் கரூர் நிலையத்துக்குச் செல்ல, அவர்களோ, ‘பை காணாமல் போனது தாந்தோணி மலை பிரிவு, அங்கு சென்று கேளுங்கள்’என்று சொல்ல, அங்கு சென்றால், ‘பை உங்களதுதான் என்பதற்கு அதனுள் பணம் இருந்ததற்கும் என்ன சாட்சி? நீங்களே எடுத்து வெச்சிட்டு நாடகம் ஆடுறீங்களா?’ என பிச்சுமணியையே போலீஸார் மடக்கியுள்ளனர்.

ஆனால் நொந்துபோன பிச்சுமணி, இந்த விபரங்களை சமூகவலைதளங்களில் பதிவிட, குணசேகரன் என்கிற தனியார் பேருந்து நடத்துநரான அந்த இளைஞர், பிச்சுமணிக்கு போன் பண்ணி, அரசுப் பேருந்தில் பிச்சுமணியின் தாயாரிடம் பையை அடித்த அந்தத் திருடன் தான் பணிபுரியும் தனியார் பேருந்தில் ஏறியதாகவும், அப்போது அங்கு வைத்து பணத்தை எண்ணிய அந்தத் திருடனை சந்தேகப்பட்டு குணசேகரன் நெருங்கியதாகவும், உடனே பையை அங்கேயே போட்டுவிட்டு அந்தத் திருடன் ஓடிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

உடனே தனது தாயாரை பெங்களூருக்கு அனுப்பிய பிச்சுமணி, தான் மட்டும் சென்று கரூர் தனியார் பேருந்து நடத்துநர் குணசேகரனை சந்தித்து, நன்றி சொல்லிவிட்டு பையை வாங்கிக் கொண்டார். பிச்சுமணியின் தாயார் விரும்பியபடியே, பணம் போனாலும் அந்த ஓய்வூதிய புத்தகங்கள் கிடைத்துவிட்டதால்  அவரரும் போன் மூலமாக, குணசேகரனுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். இது ஒரு பெரிய விஷயமே இல்லை, வயதானவர்களிடம் போய் பணத்தைத் திருடுகிறார்கள் என்று குணசேகரன் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

Tags : #KARUR #BUS CONDUCTOR