‘தினமும் நைட்ல டிவி-மூவிஸ்..செல்போன்-வீடியோஸ்’.. மனைவியின் செயலால் ஆத்திரத்தில் கணவர் எடுத்த முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Apr 12, 2019 06:59 PM

மும்பையில் தினமும் இரவு டிவி-யில் திரைப்படங்களையே தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்த மனைவிக்கும் அதனை கண்டித்த கணவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக அந்தக் கணவர் தனது மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband kills wife after she watching movies in night on Tv, mobiles

32 வயதான சேத்தன் சௌவ்கலி என்பவர் தனது 22 வயது மனைவி ஆரத்தியுடன் மும்பையின் அந்தேரி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு 2 வயது மகன் இருக்கும் நிலையில், கணவர் சேத்தன் தன் மனைவி ஆரத்தி செல்போனிலும் டிவியிலும் இணையதளத்திலும் அடிக்கடி சிறப்பு வீடியோக்கள், நாடகங்கள், முக்கியமாக இரவு நேரத்தில் திரைப்படங்களை பார்த்து வந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் சேத்தன் தன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு எழுந்ததை அடுத்து மனைவி ஆர்த்தியை அவரது வீட்டுக்கு போகச் சொல்லியும் சேத்தன் வலியுறுத்தியுள்ளார். அப்போது தனக்கும் தன் மகனுக்குமான செலவீனங்களை கொடுக்குமாறு ஆரத்தி தன் கணவரிடம் கோரியுள்ளார்.

அப்போது கணவர் தனக்கு வேலை இல்லாத காரணத்தினால் அப்படி எல்லாம் பணம் தரமுடியாது என்று புறக்கணித்துள்ளார். ஆனால் விடிந்தால் காலை தன் அம்மா வீட்டிற்கு போக வேண்டுமே என்கிற சோகத்தில் ஆரத்தி அன்று இரவு கணவருடன் இருந்துள்ளார். எனினும் அன்றைய இரவும், ஆரத்து செல்போன், டிவி உள்ளிட்டவற்றில் தொடர்ந்து வீடியோ பார்த்தும் திரைப்படங்களை பார்த்து சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த சேத்தன் இரவு நேரத்தில் திரைப்படங்களை இத்தனை சத்தமாக வைத்து பார்ப்பதை நிறுத்துகிறாயா என்று கோபமாக கூறியுள்ளார்.

அப்போது ஆரத்தி, டிவியை நிறுத்திவிட்டு யூடியூப் வீடியோக்களை பார்க்க தொடங்கியுள்ளார். இதனால் மேலும் கடுப்பான கணவர் சேத்தன் சில நேரத்திற்கு பிறகு ஒரு நைலான் கயிறு கொண்டு வந்து தன் மனைவியை அடித்து துன்புறுத்தி கழுத்தை இறுக்கிக் கொன்றுள்ளார். ஆனால் தனது மனைவி ஆரத்தி இறந்து போன பிறகுதான், கணவர் சேத்தன் தான் செய்ததை உணர்ந்துள்ளார். உடனே என்ன செய்வதென்று தெரியாமல் சேத்தன், தானாகவே போலீஸில் சென்று சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

Tags : #MUMBAI #MURDER #HUSBANDANDWIFE #BIZARRE