தூக்க கலத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்..! மதுரையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jul 24, 2019 10:23 AM

மதுரையில் தூக்க கலக்கத்தில் பெண் ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Woman falls off moving train in Madurai railway station

மதுரை சேர்ந்த பூர்ணிமா என்ற பயணி தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பயணித்துள்ளார். ரயில் மதுரை வந்தபோது பூர்ணிமா தூங்கிக் கொண்டு இருந்ததால் இறங்காமல் இருந்துள்ளார். இதனை அடுத்து ரயில் புறப்படும் நேரத்தில் சுதாரித்துக் கொண்ட பூர்ணிமா, உடனே ஓடும் ரயில் இருந்து இறங்க முயன்றுள்ளார்.

தூக்க கலத்தில் இருந்ததால் ரயில் இருந்து தவறு விழுந்துள்ளார். இதனால் அவர் நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் உடனே அவசர அழைப்பு செயினை பிடித்து இழுந்துள்ளார். இதனால் ஓட்டுநர் ரயிலை அப்படியே நிறுத்தியுள்ளார். உடனே அங்கு வந்த ரயில்வே போலிஸார் பூர்ணிமாவை மீட்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அவர்களால் முடியாததால் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நடைமேடையை உடைத்து பூர்ணிமாவை மீட்டுள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனால் சென்னை செல்ல வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரை வரவேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதுகை எக்ஸ்பிரஸ் சற்று தாமதமாக இயக்கப்பட்டுள்ளது.

Tags : #MADURAI #TRAIN #WOMAN