'நர்சிங் மாணவிக்கு'.. தாயாரின் தோழியால் நேர்ந்த கதி.. 'சோகத்தில்' மாணவியின் தாயார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jul 10, 2019 06:55 PM
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள குளச்சல் பகுதியை சேர்ந்த 3-ஆம் ஆண்டு நர்சிங் மாணவி ஒருவர் அடிக்கடி தனது தாயாரின் தோழி வீட்டிற்கு சென்று வருவதுமாக இருந்துள்ளார்.
ஆனால் சில நாட்களுக்குப் பிறகு நர்சிங் மாணவியின் உடலளவிலும் மனதளவிலும் சில மாற்றங்கள் தெரிந்ததை மாணவியின் தாயார் எதார்த்தமாக கண்டுபிடித்துள்ளார். தன் மகளின் இயல்பு மாறியுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்த தாயார், மகளின் நடவடிக்கையை கவனித்துள்ளார். பிறகு மகளிடமே கேட்டறிந்த போதுதான் தனது தோழியின் வீட்டிற்கு தன் மகள் அடிக்கடி சென்று வருவதை தாயார் தெரிந்துள்ளார்.
இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக தனது தோழிக்கு போன் செய்து தன் மகள் விஷயத்தைச் சொல்லி எச்சரித்துள்ளார். ஆனாலும் மாணவி கல்லூரி செல்லும் பொழுது கல்லூரிக்குச் செல்ல விடாமல் அந்த பெண்மணி(தாயாரின் தோழி) மாணவியை அழைத்துச் சென்று தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். மாணவி கல்லூரிக்கு செல்லவில்லை என்பதை அறிந்த மாணவியின் தாயார் முதற்கட்டமாக காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
பின்பு காவல்துறையின் உதவியுடன் சென்று மூன்று நாட்கள் அந்தப் பெண்மணியின் கட்டுப்பாட்டிலிருந்த, தன் மகளை தாயார் வீட்டு வந்துள்ளார். மாணவியிடம் இதுபற்றி கேட்டதற்கு வீட்டில் இது பற்றிச் சொன்னால், ‘உன் குடும்பத்தார் மீது ஆசிட் ஊற்றி விடுவேன்’ என்று அந்தப் பெண்மணி மிரட்டியதாகவும் மாணவி தன் தாயாரிடம் கூறியுள்ளார்.
இதனால் முன்பைவிடவும், மாணவியை மிகவும் கண்காணிப்புடனும் கட்டுப்பாட்டுடனும் பாதுகாப்பாக தாயார் வைத்திருந்திருக்கிறார். அப்படி ஒரு சூழ்நிலையிலும் கூட மாணவியின் வீட்டுக்கு நேரடியாக, இருசக்கர வாகனத்தில் வந்து, அந்தப் பெண்மணி, மாணவியைக் கடத்திச் சென்றதாக மாணவியின் தாயார் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது