‘தண்டவாளத்தில் சிக்கிய பைக்..’ மீட்க முயன்ற இளைஞர்களுக்கு ‘நொடியில் நடந்த பயங்கரம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 15, 2019 02:12 PM

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தில் சிக்கிய பைக்கை மீட்க முயன்ற இருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

two killed after being hit by train in Tiruvallur

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த பழையனூரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (35). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் நேற்று இரவு அரிசி மூட்டையை பைக்கில் ஏற்றிக்கொண்டு சின்னம்மா பேட்டை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்தபோது அங்கிருந்த கற்களில் பைக்கின் டயர் சிக்கியுள்ளது.

இதையடுத்து இருவரும் இறங்கி அரிசி மூட்டையுடன் இருந்த பைக்கை மீட்க முயன்றுள்ளனர். அப்போது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற விரைவு  ரயில் அவர்கள் மீது மோதியுள்ளது. இதில் பைக்குடன் சேர்த்து இருவரும் 500 மீட்டர் தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.  பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தண்டவாளத்தில் சிக்கிய பைக்கை மீட்க முயன்று இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #TRAIN #ACCIDENT #DISTURBING #TIRUVALLUR