‘ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jun 28, 2019 09:18 AM

மகாராஷ்ட்ராவில் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபரின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Man survives after getting stuck between platform and train

மகாராஷ்ட்ரா மாநிலம் அசாங்காகோயான் என்னும் ரயில் நிலையத்தின், நடைமேடையில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது நடைமேடைக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் ரயில் ஒன்று வேகமாக வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் உடனடியாக நடைமேடைக்கும், தண்டவாளத்துக்கும் இடையில் படுத்துள்ளார். இதனை அடுத்து ரயில் அவரை கடந்து சென்றதும், ரயில் நிலையத்தில் இருந்த அனைவரும் பதற்றத்துடன் சென்று பார்த்துள்ளனர். இதில் எந்த வித காயமும் இன்றி அந்த நபர் உயிர்பிழைத்தார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். நூலிழையில் உயிர் தப்பிய அந்த நபரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MAHARASHTRA #TRAIN