ரயிலில் தூக்க கலக்கத்துடன்.. ‘கழிவறைக்குச் செல்ல வந்த பெண்ணுக்கு நடந்த பரிதாபம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jul 15, 2019 08:21 PM

ரயிலில் கழிவறைக்குப் பதிலாக ஏறி இறங்கும் வழிக்குத் தவறுதலாக சென்ற பெண் ரயிலிலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

Woman accidentally falls off running train near Chennai

சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூருவைச் சேர்ந்த நடராஜன் என்பவர் அவருடைய மனைவி உமாதேவியுடன் பயணம் செய்துள்ளார். நள்ளிரவில் ரயில் ஆம்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது உமாதேவி கழிவறைக்குச் செல்வதற்காக வந்துள்ளார்.

தூக்கக் கலக்கத்தில் இருந்த அவர் கழிவறை என நினைத்துக்கொண்டு ஏறி இறங்கும் வழிக்குச் சென்றுள்ளார். அப்போது தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்தவர் படுகாயமடைந்துள்ளார். இரவு முழுவதும் சுமார் 7 மணி நேரம் தண்டவாளம் அருகே முட்புதரில் மயக்க நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #TRAIN #CHENNAI