ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்..! பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jul 12, 2019 07:56 PM

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Cop saves woman after she slips while boarding a running train

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது ரயில் சற்று வேகமாக சென்றதால் உடமைகளுடன் சென்ற அவரால் ரயிலில் ஏற முடியவில்லை. அதில் எதிர்பாராத விதமாக ரயில் படிகட்டில் கால் வைக்கும் போது தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனைக் கண்டு அருகில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது பணியில் இருந்த ரயில்வே காவலர் ஒருவர் ஓடும் ரயில் விழுந்து சிக்கிகொண்ட பெண்ணை மீட்க போராடியுள்ளார். அப்போது மீண்டும் எதிர்பாராத விதமாக நடைமேடையில் இருந்து அப்பெண் கீழே விழ முயன்றுள்ளார். உடனே அருகில் இருந்த பயணிகளின் உதவியுடன் அப்பெண்ணை ரயில்வே காவலர் காப்பாற்றியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் ரயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Tags : #TRAIN #CCTV #AHMEDABAD #WOMAN