'மொட்டை மாடியில் அழுகிய நிலையில் சடலம்...' 'நாலு நாளா வீட்டுக்கே வரல...' 'கொஞ்சம் நாளாவே அப்பா கூட பேசுறது இல்ல...' பதற வைக்கும் வேதனை சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடியில் வீட்டின் மாடியில் 19 வயது இளைஞர் உடல் அழுகிய நிலையில் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது மேலும் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமார், அவரது மனைவி எவரெஸ்ட் மேரி தம்பதியர் மற்றும் அவர்களது மகன் சஞ்சய் (19) தூத்துக்குடி மாவட்டதில் பூபால்ராயபுரம் முதல் தெருவில் வசித்து வருகின்றனர். சஞ்சய்க்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருப்பதால் இவருக்கும் தந்தை குமாருக்கும் அடிக்கடி வீட்டில் வாக்குவாதம் ஏற்படும் எனவும், இதனால் இவருக்குள் பேச்சுவார்த்தை ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சஞ்சய் வீட்டை விட்டு வெளியே போய்விட்டதாக கூறப்பட்டது. இது குறித்து சஞ்சய்யின் குடிப்பழக்கத்தால் மகன் வீட்டிற்கு வந்தால் வரட்டும் என அலட்சியமாக இருந்த பெற்றோர் போலீசாருக்கு எந்த புகாரும் அளிக்கவில்லை.
இன்று குமாரின் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தில் இருப்போர் குமாரின் வீட்டிற்கு சென்று கூறியுள்ளனர். இதனால் மேலே சென்று பார்த்த தந்தை குமாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தனது மகன் வீட்டின் மாடியில் அழுகிய நிலையில் சஞ்சய் இறந்து கிடந்தது தெரியவந்து அதிர்ச்சியில் உறைந்தார்.
இதனிடையில் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சஞ்சயின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் சஞ்சய்யின் தந்தை குமார் சில நாட்களுக்கு முன் வீட்டில் வைத்திருந்த வீட்டில் இருந்த பூச்சி மருந்து பாட்டில் காணாமல் போனதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
