'ஏர் பேக் வந்தும் காப்பாத்தல'...'புளிய மரத்தில் மோதி நொறுங்கிய கார்'...பிரபல ஹோட்டல் அதிபர் பலி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 14, 2019 04:15 PM

வேகமாக வந்த கார் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், பாதுகாப்பு பலூன் வந்தும், பிரபல ஹோட்டல் அதிபர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Famous Business Man Killed in Road Accident Near Tuticorin

திருச்செந்தூரை சேர்ந்தவர் கிட்டப்பா. பிரபல தொழில் அதிபரான இவர், திருச்செந்தூரில் அர்ச்சனா ஹோட்டல் மற்றும் லாட்ஜ், உதயம் காபி பார், கிட்டு காபி பார் போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். திருச்செந்தூர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலனமான இவர், சிறந்த ஆன்மிகவாதியாகவும் அந்த பகுதி மக்களால் அறியப்பட்டவர். இவர் தனது நண்பரும், திருச்செந்தூர் சாந்தி பேக்கரி அதிபருமான ராதாகிருஷ்ணன் உடன், தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை கிட்டப்பாவே ஓட்டியுள்ளார்.

இந்நிலையில் இருவரும் வந்த கார் முக்காணி அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் வேகமாக மோதியது. அதிகாலை 3.30 மணிக்கு நடத்த இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே  கிட்டப்பா பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த அவருடைய நண்பர் ராதாகிருஷ்ணன் காயங்களுடன் தூத்துக்குடி  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார்.

இதனிடையே மோதிய வேகத்தில் காரின் பாதுகாப்பு பலூன் இருபக்கமும் விரிந்தும் தொழில் அதிபர் பலியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹோட்டல் அதிபர் இறந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #ROAD ACCIDENT #TUTICORIN #BUSINESS MAN #SAFETY AIRBAG