‘75 வயதான தாய் பட்டினியாக’... ‘வெயில், மழையில் தெருவில் தவித்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 15, 2019 01:38 PM

தூத்துக்குடி அருகே மகனால் புறக்கணிக்கப்பட்டநிலையில், பட்னியால் வாடிய தாய் ஒருவர், தெருவில் 7 நாட்களாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

the 75 year old woman who abandoned by his son in street

கோவில்பட்டி பங்களா 4-வது தெருவில் யாருடைய ஆதரவுமின்றி மூதாட்டி ஒருவர், உடல் நலமின்றி உயிருக்கு போராடியநிலையில், கடந்த 7 நாட்களாக படுத்திருந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், அந்த மூதாட்டியைவை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், நடத்திய விசாரணையில், அதே தெருவைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியான சண்முகத்தாய் தான் அவர் என்பது தெரியவந்தது.

அவர் தனது மகன் சீனி என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் மூதாட்டி நோய் வாய்ப்பட்டதால், அவரை வீட்டில் சேர்க்காமல், மகன் வெளியே கொண்டுபோய் விட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 7 நாட்களாக இரவு, பகலாக வெயில் மழையில் காய்ந்தும், நனைந்தும், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். அந்த மூதாட்டி 2 நாட்கள் உணவருந்தவில்லை என்பதும் தெரியவந்தது. தற்போது சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியை, கோட்டாட்சியர் விஜயா, மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு, தேவையான சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.

சிகிச்சை முடிந்ததும், அந்த மூதாட்டியை பாண்டவர் மங்கலத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்க உள்ளதாக அதிகாரிகள்  கூறியுள்ளனர். இந்நிலையில், பெற்ற தாயை உணவளிக்காமல் தவிக்கவிட்டதாக, மகன் சீனி மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ABANDONED #ILDAGE #PEOPLE #TUTICORIN