‘என்கிட்ட அவ்ளோலாம் இல்லீங்க’... ‘அதிர வைக்கும் அபராதம்’... ‘அலறும் வாகன ஓட்டிகள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 05, 2019 01:51 PM

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி போக்குவரத்து விதியை மீறி வரும், வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபாரதத் தொகையால் வாகன ஓட்டிகள் அதிர்ந்து போயுள்ளனர்.

traffic rules violation many places fined for large amounts

புதிய மோட்டார் வாகனச் சட்டம், செப்டம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளானாலும் போதிய ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகனம் ஓட்டுபவர்கள் சிக்கி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு இடங்களில், வாகன ஓட்டிகள் அபராதத் தொகையால், அதிர்ந்து போயுள்ளனர். அப்படி சில சம்பவங்கள் பற்றி பார்ப்போம். தினேஷ் மதன் என்பவருக்கு டெல்லி போக்குவரத்துக் காவல்துறையினர், பல்வேறு சாலை விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறி, 23,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

பஞ்சாப் மாநிலம் குருகிராமில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு, விதிக்கப்பட்ட அபராத தொகை, 32 ஆயிரத்து 500 ரூபாய். இதேபோல், ஒடிசா மாநிலத்தில், உரிய ஆவணங்கள் இன்றி, குடிபோதையில், வாகனத்தை ஓட்டியதாக, புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு, அம்மாநில போக்குவரத்து காவல்துறையினர், 47 ஆயிரம் ரூபாய் அபாரதமாக விதித்துள்ளது. இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக டிராக்டர் ஓட்டுநருக்கு அதிகட்சமாக 59 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடியிலும், மது அருந்தியது, ஹெல்மெட் அணியாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது என இருசக்கர வாகனம் ஓட்டிவந்த வெங்கடேசன் என்பருக்கு, 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Tags : #FINED #TUTICORIN