உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன?.. வெளியான தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் தொடங்கி கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. உலகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 1,778,562 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,14,247 பேர் உயிரிழந்துள்ளனர். 50, 853 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4,04,878 பேர் வைரஸ் பாதிப்பில் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
