“ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்!”.. “16 வயது மகளை பலாத்காரம் செய்த கொல்லிமலை சித்தர்!”

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 27, 2020 10:46 AM

16 வயது சிறுமிக்கு அவரது தந்தையால் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக, கடந்த 24-ஆம் தேதி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு  குழந்தைகள் அவசர உதவி எண்ணில் புகார் ஒன்று வந்தது.

man practicing Siddha abused to her daughter to live long

இந்த புகாரை ஏற்று, விசாரிப்பதற்காக அச்சிறுமியின் வீட்டுக்கு போலீஸார் சென்றபோது, அங்கு சிறுமியின் தந்தை இல்லை என்றும் அவர் நாமக்கல் மாவட்டம் கொல்லி மலைக்கு சென்றதும் தெரியவந்தது. இதனால் அவரை எப்படியேனும் வரவழைக்க போலீஸார் எண்ணியுள்ளனர்.

இதற்காக, அவரது மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்று, அப்பெண்ணின் தாய் மூலம் தகவல் தெரிவிக்க வைத்தனர். இதை நம்பி, ஆவடி வந்த அந்த நபரை போலீஸார், காத்திருந்து கச்சிதமாக பிடித்தனர். அதன் பின்னர் அவரை விசாரித்தபோதுதான், குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி 10 வருடங்களாக வேலைக்க்கு செல்லாமல் இருந்த அந்த நபரின் குடும்பத்தை அவரது மனைவிதான் காப்பாற்றி வந்துள்ளார் என்று தெரியவந்தது.

மேலும் தன்னை ஒரு சித்தர் என்று கூறிக்கொள்ளும் அந்த நபர் 6 மாதங்களுக்கு ஒருமுறை கொல்லிமலை சென்று வந்ததையும், தனது ஆயுள் கெட்டியாக வேண்டும் என்பதற்காக தனது 16 வயது மகளை மகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதையும் அவரே  வாக்குமூலமாக அறிவித்ததை அடுத்து, அவரை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

Tags : #FATHER #DAUGHTER