'திருவிழாவுக்கு ஊருக்கு வந்த அண்ணனை'... 'ஆத்திரத்தில் தம்பி செய்த பகீர் காரியம்’... ‘பதறிப்போன மனைவி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 08, 2019 03:32 PM

திண்டுக்கல் அருகே அண்ணனை, தம்பியே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

elder brother killed by his younger due to property issue

திண்டுக்கல் அருகே உள்ள முத்தழகு பட்டியைச் சேர்ந்தவர் இஸ்ரவேல் ராஜா. இவர் திருச்சியில் தமது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாக குடும்பத்துடன் இஸ்ரவேல் ராஜா, திருச்சியில் தங்கி சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். இவரது தம்பி, விஜி என்ற சிங்கராயன் முத்தழகு பட்டியில்  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கோயில் திருவிழாவை ஒட்டி முத்தழகுபட்டிக்கு, தனது குடும்பத்துடன் இஸ்ரவேல் ராஜா சென்றுள்ளார். இன்று காலை இஸ்ரவேல் ராஜாவுக்கும், சிங்கராயருக்கும் இடையே மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தம்பி சிங்கராயர், இஸ்ரவேல் ராஜாவை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இஸ்ரவேல் ராஜா சம்பவ இடத்திலேயே  மயங்கி விழுந்தார். கீழே விழுந்து இருந்தால் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக அருகே இருந்த திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு இஸ்ரவேல் ராஜாவை கொண்டு சென்றனர்.

ஆனால் இஸ்ரவேல் ராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தனது கணவர் இறந்ததை அறிந்த மனைவி கதற அழுதது பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திண்டுக்கல் போலீசார், தப்பியோடிய தம்பி சிங்கராயரை கைது செய்தனர். திருவிழாவுக்கு வந்த சமயத்தில் அண்ணணை தம்பி  குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #MURDER #BROTHER