'சென்னை: இளம் பெண்ணுக்கு குளியல் அறையில் நேர்ந்த கொடூரம்.. சிசிடிவியால் அதிர்ந்த போலீஸார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 05, 2019 03:41 PM

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 30 வயதான பிங்கி என்பவர், தனது கணவர் உத்தம் மண்டேலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, வேறொரு இளைஞருடன் சென்னை அண்ணா நகரில் வசித்து வந்துள்ளார்.

North woman murdered in chennai, murderers caught in CC

மேலும், டாட்டூ வரைதல், விதவிதமான டிசைன்களை உடைய சேலைகளை விற்பனை செய்தல் உள்ளிட்டவற்றைச் செய்துவந்தார். இந்த நிலையில்தான் பிங்கியுடன் தங்கியிருந்த இளைஞர் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, பிங்கி, குளியலறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் திருமங்கலம் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். அதன் அடிப்படையில், அந்த வீட்டுக்குச் சென்று சோதனை நடத்திய போலீஸார், பிங்கியை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீஸார், பிங்கியுடன் தங்கியிருந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே பிங்கியின் வீட்டுக்கு இரண்டு பேர் வந்துபோனது சிசிடிவி கேமராவில் தெரியவந்ததை அடுத்து கூடுதல் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபற்றி பேசிய போலீஸார் கொலையாளியை அடையாளம் கண்டுவிட்டதாகவும், அவர்களை கைது செய்து விசாரித்த பிறகே மற்றதை சொல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.

Tags : #CHENNAI #MURDER #MYSTERY #WOMAN #CCTV