‘போதையின் உச்சத்திற்கு’ சென்ற ‘போலீஸ்’.. ‘சாலையில் செய்த அதகளம்..’ வைரலாகும் வீடியோ..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 08, 2019 07:21 PM

மகாராஷ்ட்ராவில் மதுபோதையின் உச்சத்திற்கு சென்ற காவலர் ஒருவர் சாலையில் தவழ்ந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Nagpur drunken police officer caught on camera video goes viral

நாக்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் மது அருந்திவிட்டு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிவந்துள்ளார். அப்போது அவருக்கு மதுபோதை தலைக்கேற இருசக்கர வாகனத்தை சாலைத் தடுப்பில் மோதி நிறுத்தியுள்ளார்.

இதைப்பார்த்த அங்கிருந்த இளைஞர் ஒருவர் அவரை சாலையோரமாக அழைத்து வர முயற்சித்தபோது, நிலைதடுமாறிய காவலர் கீழே விழுந்துள்ளார். பின் எழுந்திருக்க முடியாமல் அவர் சாலையிலேயே தவழ்ந்து கொண்டிருந்துள்ளார். இதை அருகிலிருந்த ஒருவர் செல்ஃபோனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

 

 

Tags : #MADHYA PRADESH #NAGPUR #DRUNKEN #POLICE #VIRAL #VIDEO