‘வாட்ஸ்அப்பால் நடந்த விபரீதம்’.. ‘கொசு மருந்தைக் கொடுத்து..’ கணவன் செய்த பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 05, 2019 02:19 PM

வாட்ஸ்அப்பில் வேறு ஆணுடன் பேசியதாகக் கூறி மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

UP Man Makes Wife Drink Mosquito Repellent Strangles Her To Death

ஆக்ராவிலுள்ள சுதாமபுரி என்ற பகுதியில் கடந்த 30ஆம் தேதி பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீஸார்  நடத்திய விசாரணையில் அந்தப் பெண்ணின் கணவரே அவரைக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இறந்த பெண்ணின் கணவரும், தனது மனைவி வேறு ஒரு ஆணுடன் வாட்ஸ்அப்பில் பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்திலேயே அவரைக் கொலை செய்ததாக போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக கணவரைக் கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி வேறு ஒரு ஆணுடன் வாட்ஸ்அப்பில் பேசிக்கொண்டிருந்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவன் வீட்டிலிருந்த கொசு மருந்தை எடுத்து மனைவி வாயில் ஊற்றியதும், பின்னர் அதிலும் கோபம் குறையாமல் அவரைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Tags : #HUSBAND #WIFE #BRUTAL #MURDER #WHATSAPP #MOSQUITOREPELLENT #UP #AGRA