'எங்க காதலை கண்டிப்பியா?'.. '20 தூக்க மாத்திரை.. காபி கப்பில் லிப்ஸ்டிக்'.. காதலருடன் சேர்ந்து மனைவி போட்ட ஸ்கெட்ச்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 08, 2019 01:21 PM

மும்பையில் உள்ள தானே மிராரோடு கிழக்குப் பகுதியில் வசித்து வந்தவர் 43 வயதான புரொமோத் பதான்கர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்து வந்த நிலையில், அண்மையில் தன் வீட்டில் இறந்துகிடந்துள்ளார். பின்னர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றதோடு, புரொமோத்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் புரொமோத் தூக்க மாத்திரைகள் உட்கொண்டது தெரியவந்தது. ஆகையால் இது தற்கொலையாக இருக்கலாம் என்று நினைத்த போலீஸார் தீப்தியை விசாரித்தனர்.

wife kills husband using sleeping pills with her lover

தவிர, புரொமோத்தின் படுக்கையில், தலையணைக்கு அடையில் ஆணுறைகள் இருந்துள்ளன. இதனால் புரொமோத் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்தவர் என்கிற யூகத்துக்கு போலீஸார் வந்தனர். ஆனாலும் தீப்தியை விசாரித்த போது, முதலில் சமாளித்த தீப்தி, பின்னர்தான் உண்மையைக் கக்கினார். அதன்படி, கடந்த 2015-ஆம் ஆண்டு புனேவில் பணிநிமித்தமாக இருந்தபோது, அங்கிருந்த பாஷங்கர் என்பவருடன் உண்டான கள்ளக் காதல் காரணமாக, அவ்வப்போது தீப்தியின் நடவடிக்கைகள் மாறியதை புரொமோத் கவனித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தீப்தியின் கள்ளக்காதலை கண்டுபிடித்ததோடு, கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் காதலன், பஷாங்கருடன் இணைந்து திட்டம் தீட்டிய தீப்தி, புரொமோத்தை தீர்த்துக் கட்டுவதற்காக சினிமா ஸ்டைலில் யோசித்திருக்கிறார். இதற்காக 20 தூக்க மாத்திரைகளைக் கலந்து புரொமோத்துக்குக் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், புரொமோத்தின் காபி கப்பில், லிப்ஸ்டிக் மார்க் வரைந்தும், அவரது தலையணை அடியில் ஆணுறை பாக்கெட்டை வைத்தும், அவர் பெண்களுடன் அதிக தொடர்பில் இருப்பவர் என்றொரு சித்திரத்தை உருவாக்கியுள்ளார்.

எல்லாவற்றையும் தாண்டி, புரொமோத் இறந்த தகவலை, போலீஸாருக்கு போன் செய்து கூறியதே, அவரை திட்டமிட்டுக் கொன்ற தீப்திதான். இந்த சம்பவத்தை நடத்துவதற்காக தன் குழந்தையை தீப்தி, தன் அம்மா வீட்டுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கொலைவழக்கில் தீப்தியும் அவருக்கு உடந்தையாக இருந்த காதலரும் கைது செய்யப்பட்டனர்.

Tags : #WIFE #HUSBAND #AFFAIR