‘வைகை ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவன்’.. ப்ரண்ட்ஸ் உடன் குளிக்கும்போது நடந்த விபரீதம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 18, 2019 08:47 AM

வைகை ஆற்றில் மூழ்கிய சிறுவன் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Madurai 5th std School student drowning Vaigai river

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசன வசதிக்காக மதுரை வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றுப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல் பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரைகளில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் குளிக்கவும், வாகனங்கள் கழுவவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவை சேர்ந்த குமார் என்பவரது மகன் பாலமுருகன் (10), நண்பர்களுடன் நேற்று ஆரப்பாளையம் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் ஆற்றில் மூழ்கியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறுவனை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.