‘இனி லைஃப்ல இத சாப்பிட மாட்டேன்’... ‘ஆசையாக’ சாப்பிட்ட ‘பாப்கார்ன்’ பல்லில் சிக்கி... ‘மரணத்தின்’ விளிம்பு வரை சென்ற ‘பயங்கரம்’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jan 08, 2020 09:20 PM

படம் பார்த்துக்கொண்டே சாப்பிட்ட பாப்கார்னால் ஒருவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த பயங்கரம் நடந்துள்ளது.

Popcorn Stuck In Mans Tooth Leads To Open Heart Surgery

தீயணைப்பு வீரராக வேலை செய்துவரும் ஆடம் மார்டின் (41) என்பவர் அவருடைய வீட்டில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது ஆசையாக பாப்கார்ன் சாப்பிட்டுள்ளார். அப்போது ஒரு துண்டு பாப்கார்ன் ஆடமின் பல்லில் சிக்கியுள்ளது. பின்னர் பல்லில் சிக்கிய அந்த பாப்கார்ன் 3 நாட்களாக தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்க, அவரும் அதை எடுக்க எவ்வளவோ முயற்சித்துள்ளார். அதற்காக ஆடம் பல் குத்தும் குச்சி, பேனா முனை, கம்பி என பலவற்றையும் பயன்படுத்த, அவருடைய ஈறுகள் மோசமாக சேதமாகியுள்ளன.

இதையடுத்து சில வாரங்கள் கழித்து ஒரு நாள் இரவில் ஆடமிற்கு அதிக வியர்வையுடன் தலைவலி, உடல் சோர்வு ஆகியவையும் ஏற்பட்டுள்ளது. பின்னர் தீவிரமான காய்ச்சலும் வர, உடனடியாக அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது ஆடமிற்கு இதயத்தில் ஏதோ தொந்தரவு இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் எக்ஸரே, இரத்தப் பரிசோதனை எடுக்கச் சொல்லியுள்ளனர். பின் அவருக்கு காய்ச்சல் மாத்திரைகள் மட்டும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். அதன்பிறகு சில நாட்களில் ஆடமின் கால் கட்டை விரலில் இரத்தக் கட்டி வந்து கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இதயத்தில்தான் அவருக்கு பிரச்னை எனக் கண்டறிந்த மருத்துவர்கள் அதற்கான பரிசோதனை செய்துள்ளனர். அதில் அவருடைய இதயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பின் உடனடியாக அவருக்கு 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த இதயத்தின் பெருநாடி வால்வு மாற்றப்பட்டு, மிட்ரல் வால்விலிருந்த தொற்றும் நீக்கப்பட்டுள்ளது. ஆடமின் இதய உட்சவ்வு தொற்று காரணமாகவே அவருக்கு அதுபோன்ற அறிகுறிகள் வந்ததாகவும், இதயத்தின் உட்சவ்வில் தொற்று ஏற்பட்டதற்கு அவருடைய ஈறுகள் சேதமானதே காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள ஆடம், “இனி என் வாழ்நாளில் பாப்கார்னை தொடவே மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

Tags : #MAN #TOOTH #POPCORN #HEART #SURGERY