'போட்டது 200 ரூபாய் தான்'...ஆனா வந்தது?...'இன்ப அதிர்ச்சியில் வாடிக்கையாளர்'...குவிந்தது கூட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 08, 2019 11:16 AM

ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200 தேவை என்று அழுத்தினால், ரூ.500 வந்ததை அடுத்து அந்த ஏடிஎம்-மில் மக்கள் கூட்டம் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Cash misplaced ATM floods RS 500 notes instead of 200 people go crazy

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம்-மில் திடீரென மக்கள் கூட்டம் மொய்க்க ஆரம்பித்தது. இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு தொற்றி கொண்டது. அதற்கு காரணம் ரூ.200 எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 வந்தது தான். இந்த செய்தி காட்டு தீ போல அந்தப் பகுதி முழுவதும் பரவியதால், பலரும் வந்து இயந்திரத்தில் ரூ.200 பட்டனை அழுத்தி ரூ.500 ஆக எடுத்து சென்றுள்ளனர்.

இதனிடையே இந்த செய்தி வங்கி அதிகாரிகளுக்கு தெரிய வர, அவர்கள் சம்மந்தப்பட்ட ஏடிஎம் மையத்துக்கு விரைந்தனர். அங்கு வந்த அவர்கள் உடனடியாக ஏடிஎம் மையத்தைப் பூட்டினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ரூ.200 வைக்க வேண்டிய ரேக்கில் ரூ.500 வைத்திருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு 200-க்கு பதில் 500 ஆக கிடைத்துள்ளது. எவ்வளவு தொகை எடுக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வுக்கு பிறகு தான் தெரியவரும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் பணியினை தனியார் நிறுவனங்கள் செய்து வரும் நிலையில், இதற்கான இழப்பை பணம் வைத்த தனியார் நிறுவனம் தான் ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

Tags : #ATM #500 NOTES #FLOODED #MISHAP