'4 நாளைக்கு பேங்க்,ஏடிஎம் இருக்காது'..தேவையான பணத்தை எடுத்து வச்சுக்கங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 23, 2019 12:39 PM

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று கடந்த 10-ம் தேதி அறிவித்தார்.இதன் மூலம் வேலையிழப்பு அபாயம் ஏற்படலாம்.எனவே வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்கள் மத்திய அரசை வலியுறுத்தின. ஆனால் மத்திய அரசு வங்கி ஊழியர்களின் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.இதைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Bank Strike: ATM\'s in Tamil Nadu Shutdown for 4 Days

முதல் கட்டமாக வருகிற 25-ந்தேதி நள்ளிரவு முதல் 27-ந்தேதி நள்ளிரவு வரை வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனவே வருகிற 26, 27-ந்தேதிகளில் (வியாழன், வெள்ளி) இரண்டு நாட்கள் வங்கி சேவைகள் அனைத்தும் முடங்கும்.வங்கிகள் திறக்கப்பட்டாலும் எந்த ஊழியரும் பணியில் ஈடுபடமாட்டார்கள்.

அதற்கடுத்து சனி,ஞாயிறு விடுமுறை நாட்களாக வருவதால் தொடர்ந்து மொத்தமாக 4 நாட்கள் வங்கிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.புதன்கிழமை வரை  ஏடிஎம்களில் பணம் போடப்பட்டாலும் பேங்க் வேலைநிறுத்தம் காரணமாக அனைவரும் ஏடிஎம்களில் சென்று பணம் எடுக்க வேண்டிய நிலை உருவாகும்.இதனால் ஏடிஎம்களில் நிரப்பப்படும் பணம் சுத்தமாக தீர்ந்து அடுத்த 3 நாட்களுக்கு பணம் இல்லாத நிலை ஏற்படலாம்.எனவே தேவைப்படும் பணத்தை முன்பே எடுத்து வைத்துக்கொள்ளுவது நல்லது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக இந்தியா முழுவதும் சுமார் 48,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.இதற்கு பிறகும் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் இருந்து, கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடபோவதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #MONEY #ATM #BANKSTRIKE