'என்ன மீறி'.. 'ஏடிஎம் மானிட்டர்ல கைவெச்சுருவீங்களா?'.. 'பணத்தை எடுத்துருவீங்களா?'.. பொதுமக்களை அலறவிட்ட 'பரபரப்பு' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Nov 28, 2019 05:48 PM

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள ஏடிஎம் செண்டரில், பணம் எடுக்கும் இயந்திரத்தின் மீது மலைப்பாம்பு படுத்திருந்ததைக் கண்டு அதிர்ந்த வாடிக்கையாளர்கள் தெறித்து ஓடியுள்ளனர்.

Snake rides over ATM machine in Australia. Viral photo

டயான் மான்செல் என்ற பெண் லிஸ்மோரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் வங்கி ஏடிஎம்க்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தின் மானிட்டரின் விளிம்பினைச் சுற்றி மலைப்பாம்பு தன் உடலை ஒட்டிக்கொண்டபடி வைத்துக்கொண்டிருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ந்த அப்பெண் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கூறியுள்ளார்.

அந்த பாம்பை மீறி ஏடிஎம் பட்டன்களில் ஒன்றில் கூட கைவைக்க முடியாத நிலையில், அங்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர் பாம்பை படம் எடுக்க தொடங்கிவிட்டனர். இதனால் காண்டு ஆகிய பாம்பு, சீறியுள்ளது. எனினும் பாம்பு பிடிப்பவர்கள் வந்த பின்னரே அதன் சீற்றத்தை அடக்கி தூக்கிச் சென்றனர்.

Tags : #ATM #PYTHON #AUSTRALIA