நேருக்கு நேராக 'மோதிக்கொண்ட' பைக்குகள்.. 'சம்பவ' இடத்திலேயே.. இளைஞர்களுக்கு 'நேர்ந்த' விபரீதம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Nov 27, 2019 04:00 PM
நாகை மாவட்டம் மயிலாடுதுறை பூக்கடை தெருவை சேர்ந்த கார்த்தி(28) என்ற இளைஞரும், குச்சிப்பாளை என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(28) என்னும் இளைஞரும் சித்தர்காடு என்னும் இடத்தில் எதிரெதிரே பைக்கில் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இரண்டு பைக்குகளும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.

இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தார். கார்த்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இறந்த இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
