‘சேட்டை செய்ததாகக் கூறி’... ‘பள்ளியில் கயிறால்’... ‘கட்டிவைக்கப்பட்ட 2 மாணவர்கள்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Nov 29, 2019 03:12 PM

சேட்டை செய்ததாகக் கூறி, மாணவர்கள் இருவர் வகுப்பில், பெஞ்சில் கயிறால் கட்டி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Two School Boys Allegedly Tied To Bench By Headmistress

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள காதிரி பகுதியில் நகராட்சி தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், 3-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பில் படிக்கும் 2 மாணவர்களில், காதல் கடிதம் எழுதியதாக கூறி ஒரு மாணவனையும், பிறர் பொருளை வகுப்பிலிருந்து திருடுவதாக கூறி ஒரு மாணவனையும் கட்டி வைத்து தண்டித்ததாக கூறப்படுகிறது. 2 மாணவர்களையும், அவர்களின் கை மற்றும் கால்களை பெஞ்சில் கயிற்றால் கட்டி அமர வைத்துள்ள புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாணவனின் தாயாரே இதுபோன்று, மாணவரை கட்டி வைத்ததாக தலைமை ஆசிரியை கூறியுள்ளார். மாணவர்கள் வகுப்பறையில் எப்படி கட்டி வைக்கப்பட்டார்கள் என, எனக்கு தெரியவில்லை என்று, தன்மீது உள்ள புகாரை மறுத்துள்ளார். ஆனால் பள்ளிவளாகத்தினுள் மாணவர்களை கட்டி வைக்க அனுமதித்து எப்படி என்று அவர் விளக்கம் எதுவும் கூறவில்லை. இதுகுறித்து குழந்தைகள் நல ஆணையத்திற்கு புகார் செல்ல, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags : #STUDENT #BOY #TIED