‘ஊசி போட்ட சிறிது நேரத்தில்’... ‘மயங்கி விழுந்து’... ‘இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 28, 2019 07:01 PM
சென்னையில் தவறான ஊசி செலுத்தியதால், இளம்பெண் உயிரிழந்ததாக, பெற்றோர் புகார் அளித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லாவரம் அருகே அனகாபுத்தூரை சேர்ந்தவர் நித்யா என்ற லிபியா (23). இவர் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வேலை தேடி வருகிறார். இந்நிலையில், இருமல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவர்கள் வீடு உள்ள அதேப் பகுதியில் தனியார் கிளினிக் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கிளினிக்கிற்கு நித்யாவை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பெண் மருத்துவர் ஒருவர், நித்யாவிற்கு கையில் ஊசி செலுத்திய சிறிது நேரத்தில், மூச்சுதிணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக தெரிகிறது.
இதையடுத்து, அந்தப் பெண் மருத்துவர் கூறியதைக் கேட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு நித்யாவை, பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால் நித்யாவை அந்த மருத்துவமனையில் சேர்க்க மறுப்பு தெரிவித்ததால், உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு நித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே, அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் கதறித்துடித்த பெற்றோர், தவறான ஊசி செலுத்தியதாலேயே, தங்களது மகள் இறந்துவிட்டதாகக் கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
