‘பெண்ணுடன் தகாத உறவு’.. ‘ஆள் வந்ததால் ஆடையில்லாமல் தெருவில் ஓடிய இளைஞர்’! சென்னையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 28, 2019 06:02 PM

கள்ளக்காதலியுடன் தகாத உறவில் ஈடுபட்டு ஆடையில்லாமல் தெருவில் ஓடிவந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

Chennai youth found naked in the street by police

சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை, காந்தி நகர் பகுதியில் நள்ளிரவு ஒருவர் நிர்வாணமாக சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வாட்ஸ் அப் குரூப்களில் வலம் வந்துள்ளது. இந்த நிலையில் சிசிடிவி வீடியோ காட்சியின் அடிப்படையில் நபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது திடுக்கிடும் பல தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். காமராஜர் சாலையில் உள்ள தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக அந்த இளைஞர் கூறியுள்ளார். அப்போது வெளியில் ஆள் வரும் சத்தம் கேட்டதால் வீட்டின் பின்பக்கம் வழியாக நிர்வாண நிலையிலேயே ஓடியதாக தெரிவித்துள்ளார். பின்னர் வந்து தனது உடைகளையும், செல்போனையும் எடுத்து சென்றதாக அந்த இளைஞர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த இளைஞரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : #CHENNAI #ILLEGALAFFAIR #YOUTH #NAKED #NUDE